Pages

கண்ணுபடப் போகுதையா..




”என்னடா நான் சொல்றது புரியுதா? இனியாவது வீட்டுக்கு நேரத்துக்குப் போகப்பாரு. பாவம் உன் வைஃபும் ஊருக்குப் புதுசு. ஃபிரண்ட்ஸ், சொந்தக்காரங்கன்னு யாரும் இல்லாத ஊர்ல அவங்களுக்கும் நேரம் போக வேண்டாமா? என் வைஃப்கிட்ட ரொம்ப வருத்தப்பட்டு கிட்டாங்களாம்பா”

நண்பன் சொல்லச் சொல்லப் பத்திக் கொண்டு வந்தது ஷகீலுக்கு. சரி சரியெனத் தலையை ஆட்டிவிட்டு அலுவலகத்திலிருந்து கிளம்பினான்.  எனக்கு அறிவுரை சொல்லும் இவன் என்றைக்காவது ஒன்பது மணிக்கு முன் வீடு போயிருப்பானா என்ற கோபத்தினூடே மனைவியின்மீது எரிச்சல் வந்தது.

’என்னாச்சு இவளுக்கு? ஏன் இப்படி எல்லாரிடமும் என்னைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறாள்?  வீடு விட்டால் ஆஃபீஸ், ஆஃபீஸ் விட்டால் வீடு என்றிருக்கும் என்னைப் பற்றி ஏன் நண்பனின் மனைவியிடம் தவறாகச் சொன்னாள்?’

‘நேற்றும் இப்படித்தான் ஊரில் உம்மாவுக்கு ஃபோன் செய்தால், அவர்களும்  “வீட்டுக்கு வந்தா டி.வி. முன்னாடியே காலை நீட்டி உக்காந்திருக்காம, அவளுக்குக் கூடமாட ஒத்தாசை பண்ணுப்பா. சின்னப் பொண்ணு. புது இடம்வேற.” என்று அறிவுரை மழை பொழிந்து தள்ளிவிட்டார்கள். இத்தனைக்கும் முடிந்த அளவு அவளுக்கு உதவி செய்வதுண்டு. ஒவ்வொருத்தரப் போல பேப்பரும் கையுமாவா உக்காந்திருக்கேன் வீட்டில?’

’அக்காகிட்டயும் குறை சொல்லிருக்கா; கல்லூரித் தோழன், பக்கத்துவீட்டு மாமின்னு ஒருத்தர் விடாம என்னைப் பத்தி என்னவாவது குத்தம் சொல்லிகிட்டிருக்காளே, என்ன பிரச்னை இவளுக்கு? இன்னிக்கி ரெண்டுல ஒண்ணு பாத்துட வேண்டியதுதான்’ கருவிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.

சமீரா ஃபோனில் பேசிக்கொண்டிருந்தாள். “ஆமாம்ம்மா, அதெல்லாம் என் மேல ரொம்பப் பாசமா இருக்கார். சின்னச் சின்னதா வேலையெல்லாம்கூட செஞ்சுத் தருவார். அடிக்கடி வெளியே கூட்டிட்டுப் போறார். நீ விரும்புன மாதிரியே நான் நல்லா சந்தோஷமா இருக்கேன்மா. வாப்பாட்டயும் சொல்லிடு.”

கேட்டுக்கொண்டே வந்த ஷகீல் குழம்பிநின்றான். ஆனாலும் விடக்கூடாது என்று நினைத்து அவளிடம் வந்தான். “சமீரா, உண்மையச் சொல்லு. நீ என்னோட சந்தோஷமாத்தானே இருக்கே?”

“என்னதிது புதுசா? எனக்கென்ன குறைச்சல்? நான் ரொம்ப கொடுத்துவச்சவ.”

“அப்புறம் ஏன் என் ஃப்ரண்ட்ஸ், என் அம்மா, அக்கா, ஏன் பக்கத்து வீட்டு மாமின்னு எல்லார்கிட்டயும் என்னப் பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லிருக்க?”

சிரித்தாள். “அதுவா? உங்க ஃப்ரண்ட் ஒருநாள் கூட ஒம்போது மணிக்குமின்ன வீடு வந்ததில்லையாமே? அவர் வீட்டம்மா என்கிட்ட ரொம்ப புலம்புனாங்க. பக்கத்து வீட்டு மாமியோட மருமவன் குடிகாரனாம். அவ்ளோ வருத்தப்படுறவங்ககிட்ட என் புருஷன் உத்தமன்னு பெருமையடிச்சா,  கண்ணு பட்டுறாது உங்கமேல? அத்தோட அவங்களுக்கு வருத்தம் அதிகமாகுமே தவிர தீராது.

உங்கம்மாவும், அக்காவும்கூட உங்க அண்ணனை அவர் பொண்டாட்டி முந்தானைல முடிஞ்சுகிட்டதா வருத்தப்பட்டாங்க.அதனாலத்தான் உங்களப் பத்தி அவங்ககிட்டயும் புகார் சொன்னேன். பொய்னாலும் அவங்களுக்கு சந்தோஷம் தருமே?

இருங்க இருங்க. நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னு புரியுது.  நான் சந்தோஷமா இருந்தாத்தான் என்னைப் பெத்தவங்களுக்கு நிம்மதி. அதனால அவங்ககிட்ட மட்டும் உண்மையச் சொல்லவேண்டியதாப் போச்சு. அதோட அவங்க சந்தோஷத்தால நமக்கு திருஷ்டி படாதில்ல!! என்ன சொல்றீங்க?”


Post Comment

30 comments:

Thamiz Priyan said...

Nice! ஆனா புனைவுக்கு ஏதும் இருக்கா?..;-))

Prathap Kumar S. said...

கதை என்னமோ நல்லாருக்கு ஆனா கான்செப்ட் ஹைதர் அலி காலத்தோடது...
முன்நவீனத்துவ கதை ... பின் நவீனத்துவ கதையை எதிர்பார்க்கிறோம்... :)

ஸாதிகா said...

ஹுசைனம்மா,சமூகத்திற்கு (பெண்களுக்கு)நல்ல மெசேஜ் வைத்து விட்டீர்கள்

Unknown said...

அருமையான கதை..

ஷாகுல் said...

இது கதையல்ல நிஜம் தானே -:))

ஜெய்லானி said...

என் கதை உங்களுக்கு எப்படி தெறிந்தது.

Chitra said...

இருங்க இருங்க. நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னு புரியுது. நான் சந்தோஷமா இருந்தாத்தான் என்னைப் பெத்தவங்களுக்கு நிம்மதி. அதனால அவங்ககிட்ட மட்டும் உண்மையச் சொல்லவேண்டியதாப் போச்சு. அதோட அவங்க சந்தோஷத்தால நமக்கு திருஷ்டி படாதில்ல!! என்ன சொல்றீங்க?”


.......என்ன சொல்றது? அதான் நீங்களே, காரணத்தை அருமையா சொல்லிட்டீங்களே. நல்ல கதை தந்து இருக்கீங்க.

Thenammai Lakshmanan said...

ஆஹா புது மணத்தம்பதியை எல்லாம் உங்க கிட்டே கவுந்சிலிங்க்குக்கு அனுப்பலாம் போல இருக்கே

Anonymous said...

நல்லா இருக்கு கதை. இந்த மெத்தட் எப்பவுமே நல்ல பலன் தரும் :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்ல கதை ஹூசைனம்மா.. நம்மைப் பத்தி யாரிடமாவது பெருமை பேசுவதற்கு முன்பு அவர்கள் அதை கேட்டு என்ன உணர்வு கொள்வார்கள் என்று யோசித்து பேசுவது மிகவும் நல்ல விஷயம்.. நிறைய பேருக்கு புரிவதில்லை..

அம்பிகா said...

சைக்கலாஜிக்கலா சொல்லியிருக்கீங்க.
நல்லாயிருக்குங்க.

நட்புடன் ஜமால் said...

சிரித்தாள். “அதுவா? உங்க ஃப்ரண்ட் ஒருநாள் கூட ஒம்போது மணிக்குமின்ன வீடு வந்ததில்லையாமே? அவர் வீட்டம்மா என்கிட்ட ரொம்ப புலம்புனாங்க]]

அதால் தான் அவர்ட்ட சொல்ல சொன்னேன் - அப்பவாவது அவருக்கும் சீக்கிரம் போகனுமுன்னு தோனுமே

---------------------

நல்லா சொல்லியிருக்கீங்க ஹூஸைனம்மா.

அப்துல்மாலிக் said...

அனுபவம் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

கலக்குங்க

நாஸியா said...

ஹிஹி... நல்ல டெக்னிக் தான்..

S.A. நவாஸுதீன் said...

அட வித்தியாசமா ரொம்ப நல்லா இருக்கு ஹுசைனம்மா.

SUFFIX said...

இப்படியும் அன்பை வெளிப்படுத்தலாம்னு அழகா சொல்லி இருக்கீங்க,நல்லா இருக்கு ஹுசைனம்மா!! அடுத்த முறை 'டவிஸ்ட்' பகுதியை இன்னும் மெருகூட்டுங்க.

அன்புத்தோழன் said...

hmmm... varungaalam kanla theryudhu enaku.... ha ha

Abu Khadijah said...

அருமையான கதை, அதற்கு அப்புறம் அந்த ஆளு என்ன ஆனார் , என்று நினைப்பதற்குள் கதை முடிந்தது ஏமாற்றம் அளிக்கிறது . ஆனா ஒன்னு பெண்களுக்கு நல்ல ஒரு ஐடியா சொல்லிருகீங்க ,அப்புறம் எனக்கு ஒரு சந்தேகம் , இது கதைய இல்லே நிசமா?@

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கதை , ரொம்ப சூப்பர் ஹுசைனம்மா

கோமதி அரசு said...

அருமையான கதை ,சகோதரி.

வாழ்க்கையில் ஏற்படும் அனுபவம் தான் பாடம்.

எல்லோரும் கற்றுக்கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

அம்பிகா said...

ஹுசைனம்மா!

டீனேஜ் டைரி என முல்லை தொடங்கிய தொடர்பதிவுக்கு நான் உங்களை அழைத்திருக்கிறேன். விருப்பமிருந்தால் எங்களோடு பகிருங்களேன்.

எம்.எம்.அப்துல்லா said...

:)

ஹுஸைனம்மா said...

அப்துல்லா, இன்னும் என்னோட முந்தின ரெண்டு பதிவுகளுக்கு உங்க கமெண்ட்ஸ் வந்து சேரல!! :-)

அன்புடன் மலிக்கா said...

நல்ல கதையாவுல்ல இருக்கு.
பெண்காதசிரியராகிட்டீங்க ஹுசைன்னம்மா..

கண்ணா.. said...

இந்த பதிவு இன்னும் என் டேஷ் போர்டுக்கு வரலையே.....

அதான் லேட்..

கதையும் நல்லாத்தான் வருது...

//நாஞ்சில் பிரதாப் said...

முன்நவீனத்துவ கதை ... பின் நவீனத்துவ கதையை எதிர்பார்க்கிறோம்...//

ரிப்பிட்டேய்ய்...

:)

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான கதை, நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.

அருமையாக கொண்டு போய் கருத்தை சொல்லி இருக்கீங்க..

ஹுஸைனம்மா said...

தமிழ்ப்பிரியன் - நன்றி. நமக்குத் தெரிஞ்ச புனைவு அவ்வளவுதாங்க!! ;-)

பிரதாப் - நாலுதிசையில தேடினாலும் நம்மகிட்ட நவீனமெல்லாம் வராது. :-)

ஸாதிகாக்கா - ஏதோ உ.கு. போலத் தெரியுது!! ;-)

ஃபாயிஸா - நன்றி.

ஷாஹுல் - எப்படிங்க கண்டுபிடிச்சீங்க? உடம்பெல்லாம் மூளைபோல!! ;-)

ஜெய்லானி - இதெல்லாம் ஓவர்!!

சித்ரா - நன்றி.

ஹுஸைனம்மா said...

தேனம்மையக்கா - எனக்கே அப்பப்ப கவுன்சிலிங் தேவைப்படுது, இதிலெங்க நான் மத்தவங்களுக்கு பண்ண? நன்றி அக்கா.

சின்னம்மிணிக்கா - ஆமா, மத்தவங்க நம்மள விடக் கஷ்டப்படுறாங்கன்னு தெரிஞ்சா, நமக்கு இருக்கதே போதும்னு நிறைவு வரும்.

எல் போர்ட் - ஆமாப்பா, சில பேர் அப்படி பெருமை பேசறதைப் பாக்கும்போது எரிச்சலா வரும். நக்கலா நாலு வார்த்தை எப்படியாவ்து சொல்லத்தோணும்.

அம்பிகா - ஆமாங்க, செருப்பில்லாதவன், காலில்லாதவனைப் பாத்துப் படிச்சுக்கணும்.

ஜமால் - நன்றி.

ஹுஸைனம்மா said...

அபுஅஃப்ஸர் - ஆமாம், மனிதர்கள் எத்தனையோ நிறங்கள்!!

நாஸியா - புதுப்பொண்ணு படிச்சுக்கங்க.

நவாஸ் - நன்றி.

ஷஃபிக்ஸ் - நன்றி. ஊகக்த்திற்கு நன்றி.

அன்புத் தோழன் - ஒளிமயமாத்தானே தெரியுது எதிர்காலம்?

அதிரை எக்ஸ்பிரஸ் - அதுக்கப்புறம் என்ன ஆவார் அவர்? அம்மணி டெக்னிக்கப் பாத்து ஃபிளாட் ஆவார். அவ்வளவுதான்!! நிஜத்தின அடிப்படையில ஒரு கதை!!

ஹுஸைனம்மா said...

ஸ்டார்ஜன் - நன்றி. உங்க பெயர்க்காரணம் என்னங்க?

கோமதிக்கா - நன்றி அக்கா.

அப்துல்லா - பிஸியோ?

மலிக்கா - நல்ல கதைதானே? நன்றி.

கண்ணா - வண்டில ஆக்ஸிலரேட்டர்லதான் பிரச்னைன்னாங்க, டேஷ்போர்ட்லயுமா? :-) ஏன்னு தெரியலங்க. ரெஃப்ரெஷ் பண்ணிப் பாருங்க.

ஜலீலாக்கா - நன்றி.